ஈழயுத்தத்தின் விளைவால் போராட்டம் நிறைந்த வாழ்க்கையையே போண்டாமணி வாழ்ந்தார்: தென்னிந்திய நடிகர் உருக்கம்
இலங்கையில் இடம்பெற்ற விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிரான யுத்தத்தில் பாதிக்கப்பட்டு போராட்டம் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்த ஒருவரே நடிகர் போண்டாமணி என தென்னிந்திய நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் கூறியுள்ளார்.
நடிகர் போண்டா மணியின் மரணம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“குண்டு அடிப்பட்டு இலங்கையில் இருந்து அகதியாக வந்தார், போராடியே வாழ்க்கையை வாழ்ந்தார்.எவ்வளவோ கஷ்டப்பட்டும் எனது நண்பன் போண்டா மணியின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை” என்றார்.
போண்டா மணியின் இறப்பு
மேலும், நடிகர் போண்டா மணிக்கு இலங்கைக்கு செல்ல வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது எனவும் நகைச்சுவை நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
அவரது மறைவுக்கு செந்தில், சிங்கமுத்து, சிசர் மனோகர், சுப்புராஜ் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், போண்டா மணியின் மறைவு குறித்து செய்தியாளர்களை சந்தித்த சுப்புராஜ் கூறும்போது,
ஈழத்திற்கு செல்லும் ஆசை
'போண்டா மணி எல்லோருக்கும் நல்லது செய்வார். என் பேச்சை கேட்பார். போண்டா மணி குடும்பத்திற்கு வசதி இல்லை.
திரையுலகினர் அனைவரும் சேர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஏதாவது செய்ய வேண்டும்.
இலங்கைக்கு போக வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. தனது பிள்ளைகளை ஈழத்திற்கு கூட்டிச்சென்று காட்ட வேண்டும் என விரும்பினார்.கடவுசீட்டு வந்தவுடன் அவர் உயிருடன் இல்லாமை வருத்தமளிக்கிறது'' என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |