எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம்: எலான் மஸ்க்
எக்ஸ் (டுவிட்டர்) செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
எலான் மஸ்க் டுவிட்டர் தளத்தை வாங்கியதில் இருந்தே பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில் தற்போது எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று கூறியிருக்கிறார்.
பண பரிமாற்றம் செய்யும் உரிமம்
இது தொடர்பில் எலான் மஸ்க் நிருபர்களிடம் கூறுகையில், ''எக்ஸ் செயலி மூலம் மற்றவர்களுக்கு பண பரிமாற்றம் செய்யும் உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.
மேலும், இறுதி ஒப்புதல் வந்த பிறகு அடுத்த ஆண்டின் (2024) நடுப்பகுதியில் எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம் செய்ய முடியும்' எனக் கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
