இன்னும் சில தினங்கள் மாத்திரமே..! சுவிஸ் திரையரங்குகளில் பொம்மை திரைப்படம்
இன்னும் சில தினங்களில் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பொம்மை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அத்துடன், இந்த திரைப்படம் சுவிட்சர்லாந்தில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ள இந்த திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் வாழும் புலம்பெயர் தமிழர்கள் தங்களின் ஆதரவை வழங்கி வருகின்றனர்.
“பொம்மை” திரைப்படம் பாஸ்கரன் கந்தையா தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஈழத்தமிழர்களின் வாழ்வியல் அனுபவங்களை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஈழப் பெண்ணொருவரால் உருவாக்கப்பட்டுள்ள பொம்மை திரைப்படத்தில், ஈழ மக்களின் ஆதங்கங்களும் அவர்கள் எதிர்கொண்ட துயரங்களும் வெளிப்படும் வகையில் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் போன்ற காவியத் தன்மை கொண்ட கதையாக இது அமைந்துள்ளதாகவும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இந்த திரைப்படத்தை கண்டுகளிக்க வேண்டும் என்றும் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
YOU MAY LIKE THIS VIDEO
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri