ஈழத்தின் பெருமையான பொம்மை திரைப்படம் திரைக்கு வருகின்றது..!
இலங்கை தமிழ் திரைப்படத்துறையின் நேர்மறையான அம்சங்களில் ஒன்று அதன் இன பன்முகத்தன்மை.
30 வருட யுத்தத்தின் விளைவால் தமிழ் கலைஞர்களுக்கு கிடைக்கப்பெறாத திரைத்துறை வாய்ப்புக்களை அவர்களாக உருவாக்கிப் பயணித்து ஒரு மறு மலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை.
இலங்கைத் திரைப்பட வெற்றி
கலைஞர்களின் ஓய்வின்றிய உழைப்பே இலங்கையின் தமிழ் சினிமாவுக்கு மூலதனமாக இருக்கிறது.
இந்த இலங்கைத் திரைப்பட வெற்றி ஓட்டத்தின் ஒரு அங்கமான நம் நாட்டு கலைஞர்களால் எதிர்வரும் 19ஆம் திகதி பொம்மை திரைப்படம் வெளியிடப்படுகிறது.
நமது படைப்புக்களைத் தரமில்லை என்று சொல்பவர்கள் நிச்சயமாக ஒரு தடவை திரையரங்குகளுக்குச் சென்று பொம்மை திரைப்படத்தை பார்வையிடவேண்டும்.
நமது கதைகளை நாமே சொல்வோம் என்று துணிந்து வெற்றி கண்டிருக்கும் இயக்குநர் உட்பட படக்குழுவின் முழு உழைப்பும் எதிர்வரும் 19ஆம் திகதி திரையில் பிரதிபலிக்கவுள்ளது.
இயக்கம் - நவயுகா குகராஜா
ஒளிப்பதிவு - மதுனி
ஹிரன்யா அழகக்கோன் வற்சு
இசை - M.ரஜனிகாந்த்
படத்தொகுப்பு - மாருதி.K
தயாரிப்பு வடிவமைப்பு - ஜோசுவா ஹெபி
ஒலி வடிவமைப்பு - சிக பூபதிராஜா
முதன்மை நிர்வாகத்தயாரிப்பாளர் - விக்கி
IBC தமிழ் தயாரிப்பு நிறுவனமானது தொடர்ச்சியாக நம் கலைஞர்களைச் சர்வதேசத் தரமான சினிமாவை உருவாக்க வைக்கும் முயற்சியில் பல படைப்புக்களைத் தயாரித்திருக்கிறது.
பொம்மை திரைப்படம்
நமது கலைகளை வளர்க்க வேண்டிய கடப்பாடு நம்முடையதே என்பதன் அடிப்படையில் பொம்மை திரைப்படத்தைத் தயாரித்திருப்பது மிகவும் மகிழ்வளிக்கிறது.
பல மிகத் திறமையான நமது கலைஞர்களை அறிமுகப்படுத்துவதில் IBC பெருமை கொள்கிறது.
நவயுகா குகராஜா, யசோதா , திருமலை பிரணவன், சுகிர்தன் கிறிஸ்துராஜா,ரெக்சன் விக்கி, மல்லிகா கீர்த்தி, ஐங்கரன் ஜெனொஷியா போன்ற இலங்கையின் திறமை மிக்க நடிக நடிகைகளின் கூட்டு முயற்சியில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது.
இது சுவீடன் நாட்டின் சேர்ந்த லுலீயா சர்வதேச திரைப்பட விழாவிலும் போடன் சர்வதேச திரைப்பட விழாவிலும் தமிழகம் சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை வென்றுள்ளது. அத்தோடு சினி ரோயல் சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தெரிவாகியுள்ளது.
இவ்வாறு நீளும் IBC தமிழ் தயாரிப்பின் சாதனைப்பட்டியலில் அடுத்த அங்கமாக பொம்மை திரைப்படமும் வலம் வரவுள்ளது.



