தென்கொரியா மீது வீசப்பட்ட குண்டுகள்! மீட்பு நடவடிக்கை தீவிரம்
அமெரிக்காவுடனான கூட்டு இராணுவ பயிற்சியின் போது தென்கொரியா மீது வீசப்பட்ட குண்டுகளால் பாதிப்படடைந்த மக்களை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
போர்விமான ஒத்திகையின் போது பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது விமானங்கள் தவறுதலாக குண்டுகளை வீசியதில் 30 பேர் காயமடைந்துள்ளனதாகவும், நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
வடகொரியா எல்லைக்கு அருகில் உள்ள பொச்சியோன் என்ற நகரத்தின் குடியிருப்புகள் மீது விமானப்படையின் கேஎவ் 16 விமானங்கள் தவறுதலாக குண்டுகளை வீசியுள்ளன.
பாதுகாப்பாக அகற்றும் நடவடிக்கை
இதில் ஒரு குண்டு வெடித்துள்ளது, ஏனைய குண்டுகளை பாதுகாப்பாக அகற்றும் நடவடிக்கைகளில் குண்டு செயல்இழக்கவைக்கும் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சம்பவத்திற்கான காரணம் குறித்து இராணுவ விசாரணை தொடங்கிப்பட்டிருக்கிறது என்றும், விமானிகள் ஒவ்வொருவரும் கேஎஃப்-16 வகை ராணுவ போர் விமானங்களை 200-400 மணி நேரம் வரை ஓட்டிய அனுபவத்தை கொண்டிருக்கிறார்கள் எனவும் கடந்த 2-3 ஆண்டுகளாக இவர்கள் இந்த விமானங்களை இயக்கி வந்திருக்கிறார்கள் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், விமானியின் மீது தவறு உள்ளதாக கூறப்படுகிறது.