பிரித்தானியாவில் சிக்கிய ரஷ்யாவின் முக்கிய உளவாளிகள்: வெளியான அதிர்ச்சி தகவல்
ரஷ்யாவின் உளவு பிரிவை சேர்ந்த மூவர், பிரித்தானிய கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் GRU உளவு சேவைக்காக பிரித்தானியாவில் உளவு பார்த்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் குற்றவாளிகளாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த உளவு குழுவின் பெயர், "தி மினியன்ஸ்” (The Minions) எனவும், அவர்கள் "டெஸ்பிகபிள் மீ” (Despicable Me) கார்ட்டூன் கதாபாத்திரங்களைப் போல செயல்பட்டு, அதிநவீன உளவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிநவீன உளவு
இக்குழுவின் திரைப்பட பாணியிலான உளவு நடவடிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த உளக்குழுவில், வடக்கு லண்டனின் ஹாரோவில் வசிக்கும் ஆய்வக உதவியாளரான கத்ரின் இவனோவா (Katrin Ivanova, 33 வயது) என்பவர், மேற்கு லண்டனின் ஆக்டனில் வசிக்கும் அழகுக்கலை நிபுணரான வன்யா கபெரோவா (Vanya Gaberova 30 வயது) என்ற இரு பெண்களும் வடக்கு லண்டனின் என்ஃபீல்டில் வசிக்கும் பெயிண்டர் மற்றும் டெக்கரேட்டரான திஹோமிர் இவான்சேவ் (Tihomir Ivanchev 39 வயது) ஆகியோர் அடங்குகின்றனர்.
பிரித்தானியாவின் கிரேட் யார்மவுத் கடற்கரை நகரத்தில் உள்ள 33 அறை விருந்தினர் இல்லத்தை மையமாக வைத்து இந்த உளவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மூளையாக செயற்பட்டவர்..
இந்நிலையில் இந்த இரு பெண்களும், பைசர் ஜம்பாசோவ் (Bizer Dzhambazov, 43 வயது) என்ற மருத்துவ விநியோகத்தருடன் (medical courier) காதல் உறவில் இருந்துள்ளனர்.
ஜம்பாசோவ் இந்த உளவு வளையத்தின் கள நடவடிக்கைகளை ஒருங்கிணைத்துள்ளதாகவும் இந்த நடவடிக்கையின் மூளையாக ஓர்லின் ரூசெவ் (Orlin Roussev, 46 வயது) என்ற நபர் செயல்பட்டுள்ளதாகவம் அவர் முன்னாள் நகர தொழில்முறை நிபுணர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, இவர்களுடன் மாஸ்கோவில் உள்ள ஜான் மார்சலெக் (Jan Marsalek,, 44 வயது) என்ற வயர்கார்ட் என்ற முக்கிய நிதி மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைமை இயக்க அதிகாரி தொடர்பாளராக செயற்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
