இந்தியாவில் இருந்து இலங்கை வந்த விமானத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்
மும்பையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விமானம் இன்று (24.10.2024) காலை 15:15 மணிக்கு வரவிருந்ததாகவும், தரையிறங்குவதற்கு முன்பு விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெறிமுறைக்கு ஏற்ப அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
107 பயணிகள்
107 பயணிகள், ஒரு கைக்குழந்தை மற்றும் 8 பணியாளர்களுடன் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.
அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து பயணிகள் முனைய கட்டிடத்திற்கு விரைவாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், 24 மணி நேரத்திற்குள் 85 விமானங்களுக்கு புதிய அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்திய கணக்கின்படி, இந்த அச்சுறுத்தல்கள் ஏர் இந்தியாவிலிருந்து 20 விமானங்களுக்கும், இந்தோகோவிலிருந்து 20 விமானங்களுக்கும், விஸ்தாராவிலிருந்து 20 விமானங்களுக்கும் மற்றும் ஆகாசா ஏர்லைன்ஸின் 25 விமானங்களுக்கும் இலக்காகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |