அராலி தெற்கில் வெடி குண்டுகள் மீட்பு
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்குப் பகுதியில் இருந்து வெடி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
அராலி தெற்கினைச் சேர்ந்த நபர் ஒருவர் இன்றைய தினம் தனது காணியினைச் சுத்தம் செய்துள்ளார்.
இந்த நிலையில் அவரது காணியில் உள்ள கிணறு ஒன்றில் குறித்த வெடிகுண்டுகள் இருப்பதனை அவதானித்த அவர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனை அகற்றுவதற்கான நீதிமன்றத்தின் அனுமதியை பொலிஸார் கோரியுள்ளனர். அனுமதி வழங்கிய பின்பு குறித்த குண்டுகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்,அதுவரை அராலித்துறை இராணுவத்தினரின் கண்காணிப்பின் கீழ் குறித்த வெடிகுண்டுகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

