அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு
நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் இருந்து அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று (17) காலை மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்து நிலையத்தினுள் ஒருவர் இறந்து கிடப்பதாக நுவரெலியா மாநகர சபை ஊழியர் ஒருவர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த நபரும் அவருடன் இருந்த பெண்ணும் கடந்த 5 நாட்களாக நுவரெலியா பேருந்து தரிப்பிடத்தில் யாசகம் பெற்று வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், அதிக குளிர் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
