தாயும், குழந்தையும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
வவுனியா - பறண்நட்டகல் பகுதியில் கிணற்றில் இருந்து தாயினதும், அவரது மூன்று வயது குழந்தையினதும் சடலங்களை ஓமந்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த இருவரும் நேற்றையதினம் அவர்களது வீட்டில் இருந்துள்ளனர்.
எனினும் இரவு 12 மணியவிளவில் காணாமல் போயிருந்த நிலையில் ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் அவர்களை தேடியுள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் காலை வீட்டிற்கு அருகில் இருந்த வயல் கிணறு ஒன்றில் இருந்து அவர்கள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்த ரமேஸ் ஜெயலலிதா (வயது 42) மற்றும் அவரது மூன்று வயது மகளான றிதுர்சனா ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri