வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்!சடலத்தை புதைக்குமாறு பெற்றோரிடம் ஒப்படைப்பு
வவுனியாவில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது சிறுவனின் உடல் கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக மொரட்டுவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிறுவனின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் வீட்டின் பின்பகுதியில் தலையில் அடிப்பட்ட காயத்துடனும், கழுத்தில் வெட்டுக்காயத்துடனும் நேற்று (06.07) காலை சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுவனின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்ட பொலிசார் வவுனியா தடவியல் பொலிஸாரின் உதவியுடன் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சிறுவனின் சடலத்திற்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் வவுனியா சட்ட வைத்திய அதிகாரி ஈ.ஜி.யூ.என்.குணரட்ண மற்றும் பொலிசார் முன்னிலையில் பிரேத பரிசோதனைக்கள் இடம்பெற்றிருந்தன.
இருப்பினும், மேலதிக தகவல்கள் தேவைப்பட்டமையால் சிறுவனின் உடல் கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக மொரட்டுவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனையடுத்து சிறுவனின் மரணம் தொடர்பில் சந்தேகம் உள்ளமையால் உடலை எரியூட்டாமல் புதைக்க வேண்டும் என சட்ட வைத்திய அதிகாரியால் தெரிவிக்கப்பட்டு சடலம், பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
