வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் PCR பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பு
வவுனியாவில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது சிறுவனின் உடலில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளையடுத்தே, பிரேதப் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதால் பி.சி.ஆர் முடிவுக்காகச் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய உதயச்சந்திரன் சஞ்சீவன் என்ற சிறுவன் நேற்றையதினம் (06) காலை 8.00 மணியளவில் வெட்டுக்காயங்களுடன் வவுனியா லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பின்பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் அவரின் வீட்டின் பின்பகுதியில் தலையில் அடிப்பட்ட காயத்துடனும், கழுத்தில் வெட்டுக்காயத்துடனும் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
சிறுவனின் மரணத்தில் சந்தேகம் வெளியிட்ட பொலிஸார், அது தொடர்பிலான விசாரணைகளை தடவியல் பொலிஸாரின் உதவியுடன் பல்வேறு கோணங்களில் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சிறுவனின் குடும்பத்தினர், சகோதரன், சகோதரனின் நண்பன் ஆகியோரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், பிரேதப் பரிசோதனைகளுக்காகச் சடலத்தினை மாலை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துசென்றுள்ளனர்.
வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சிறுவனின் சடலத்திற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் முடிவுகளின் பின்னரே பிரேதப் பரிசோதனை இடம்பெறும் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
