சம்மாந்துறையில் மீட்கப்பட்ட சடலம்: பொலிஸார் தீவிர விசாரணை
வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் சம்மாந்துறை பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (01.04.2026) மீட்கப்பட்ட சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சம்மாந்துறை சாலி வீதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஆதம்பாவா ரியால் என்பவர் என தெரியவந்துள்ளது.
பொலிஸார் தீவிர விசாரணை
இன்று காலை குறித்த பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் அடையாளம் காணப்படாத நிலையில், பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் உயிரிழந்தவரின் விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மரணத்திற்கான காரணம் மற்றும் ஏனைய சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

