வவுனியா தேவகுளத்தில் இளைஞனின் சடலம் மீட்பு
வவுனியா, தேவகுளம் வயல்வெளியில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (17) பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் கருணா என்ற 23 வயது இளைஞனே இவ்வாறு வயல் வெளியில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் மீட்பு
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த நபரின் சடலம் காணப்படும் பகுதிக்கு அருகில் அவர் கொண்டு வந்த பை, பாதணி மற்றும் தலைக்கவசம் காணப்படுவதோடு குறித்த பகுதிக்கு வெளியில் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சடலத்தை காலை அவதானித்த ஊரவர்கள் பொலிசாரிக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அவர்கள் சடலத்தை மீட்டதோடு மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam