தாளையடி கடற்பரப்பில் காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியது
யாழ்.வடமராட்சி கிழக்கு, தாளையடி கடற்பரப்பில் காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாளையடி கடற்பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இளைஞனின் சடலமே இன்று(30.12.2025) கரையொதுங்கியுள்ளது.
கரையொதுங்கிய சடலம்
நண்பர்களுடன் தாளையடி கடற்கரைக்கு நீராடச் சென்ற வேளை, ஒருவர் மாத்திரம் கடலோடு இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக இளைஞனை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், சடலம் அதே பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவி்க்கப்படுகிறது.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய உதைபந்தாட்ட வீரர் ஆவார்.
இந்த நிலையில், இளைஞனின் சடலத்தை மருதங்கேணி பொலிஸார் பார்வையிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.