படகு விபத்தில் காணாமல் போன இலங்கை கடற்படை அதிகாரியின் சடலம் மீட்பு
அங்குலான கடற்பகுதியில் இடம்பெற்ற கடற்படை படகு விபத்தில் காணாமல் போயிருந்த கடற்படை அதிகாரியின் உடல் இன்று (4.9.2026) இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
அத்துடன் சுமார் 80 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த படகின் உட்பகுதியில் இருந்து கடற்படை மூழ்காளர்களால் இந்த உடல் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை
இதேவேளை மிக மோசமான வானிலை, குறைந்த பார்வைத் தெளிவு மற்றும் குறுகிய இடங்கள் காரணமாக தாமதமான இந்த நடவடிக்கை, சூழல் சாதகமானதும் பாதுகாப்பாக நடத்தி முடிக்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய விபத்து நடந்த நாளன்றே அங்குலானா பொலிஸார் மற்றும் கடற்றொழிலாளர்களின் உதவியுடன் 11 வீரர்கள் மீட்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து பனதுராவிலிருந்து சிலாவ் வரையிலான கடலோரப் பகுதிகளில் வான் மற்றும் கடல் வழியே தீவிர தேடுதல் நடத்தப்பட்டு வந்தது.
விபத்து
மேலும் மீட்கப்பட்ட உடலின் அடையாளத்தை உறுதிப்படுத்தல் மற்றும் பிரேதப் பரிசோதனைக்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் நீரில் மூழ்கியிருந்த ஏதேனும் ஒரு சிதைவுப் பொருளின் மீது படகு மோதியிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், விபத்துக்கான முழுமையான காரணத்தைக் கண்டறிய நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening