புதருக்குள் இருந்து திடீரென பாய்ந்த சிறுத்தை - தேயிலைத் தோட்ட தொழிலாளி படுகாயம்
பொகவந்தலாவை பகுதியில், தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று(04.09.2026) பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது.
சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த பெண் தொழிலாளி, பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தொழிலாளி கொழுந்து பறித்துக் கொண்டிருக்கையில், புதருக்குள் இருந்து திடீரென பாய்ந்த பெரிய அளவிலான சிறுத்தை ஒன்று அப்பெண்ணின் கழுத்து மற்றும் கை பகுதியில் தாக்கியுள்ளது.
சிறுத்தை தாக்குதல்
சிறுத்தையின் தாக்குதலால் அந்த பெண் நிலத்தில் விழுந்த நிலையில், அருகிலிருந்த ஏனைய தோட்டத் தொழிலாளர்கள் கூச்சலிட்டதையடுத்து சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் வளர்ப்பு நாய்களைத் தேயிலைத் தோட்டங்களுக்கு அழைத்துச் செல்வதால், அந்நாய்களை இரையாக்கிக் கொள்ளவே சிறுத்தைகள் அப்பகுதிக்கு வருகின்றன என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாய்களை வேட்டையாட முயலும் போது ஏற்படும் தடைகள் காரணமாகவே, அருகில் இருக்கும் மனிதர்கள் மீது சிறுத்தைகள் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் செல்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening