குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற ஆண் ஒருவர் சடலமாக மீட்பு
வாழைச்சேனை சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்க சென்ற ஆண் ஒருவர் குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது இன்று (07.07.2026) பகல் மீட்கப்பட்டுள்ளது.
சுங்காங்கேணி சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய தம்பிராசா மகேந்திரகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
வாழைச்சேனை நீதிமன்றத்துக்கு அருகாமையில் உள்ள சுங்காங்கேணி தாமரைக்குளத்தில் மீன்பிடிப்பதற்காக நேற்று(06) குளத்தில் வலையை வீசி விட்டு வீடு திரும்பியவர் சம்பவ தினமான இன்று(07) காலையில் ஆகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் தேடிச் சென்றுள்ளனர்.

இதன் போது குறித்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு வலிப்பு நோய் இருப்பதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நீர்கொழும்பு சிறையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் பதற்றம் - அவசர விசாரணைக்காக விரையும் முக்கிய அதிகாரிகள்

சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
விஜய் குறித்து ரசிகர்களுக்கு தெரியாத விஷயத்தை கூறிய இயக்குனர் லிங்குசாமி... என்ன தெரியுமா? Cineulagam
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri