மட்டக்களப்பு தேற்றாத்தீவு தாழ்நிலப் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தின் வீதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது நேற்று (21.02.2024) மாலை மீட்கப்பட்டுள்ளது.
தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தின் தாழ் நிலத்தை அண்டியுள்ள வீதில் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிஸாருக்கு அந்த பகுதி பொதுமக்கள் வழங்கி தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து சடலத்தை மீட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த 84 வயதுடைய ஆறுமுகம் கிருஸ்ணபிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.தியாகேஸ்வரன் அவர்களின் உத்தரவுக்கமைய சடலத்தைப் பார்வையிட்ட களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம், சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தமாறு உத்தரவிட்டுள்ளார்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 21 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
