தலைமன்னாரில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு
தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வேரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்கள் குறித்த நபரை காணாத நிலையில் அவரின் நண்பர் மூலம் இன்று (28.12.2023) சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மரியதாஸ் ரொனால்ட் ரீகன் (வயது-43) இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக பரிசோதனை
இதனையடுத்து உடனடியாக உயிரிழந்தவரின் குடும்பத்தார் உட்பட தலைமன்னார் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த தலைமன்னார் பொலிஸ் மற்றும் தடவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததையடுத்து சடலம் மேலதிக பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
