அடுத்தடுத்து மீட்கப்படும் பெண்களின் சடலங்கள்! இலங்கையை உலுக்கும் கொலைகள் (Video)
இலங்கையில் தற்போதைய காலங்களில் நிகழ்ந்து வருகின்ற கொலை சம்பவங்கள் இலங்கை நாட்டை முழுவதும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கி வருகிறது.
இந்த வருடத்திற்குள் மாத்திரம் ஒரே விதமாக இரண்டு கொலை சம்பவங்கள் நடைபெற்றதுடன் பல பெண்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்பட்டு வருவதை நாம் காணகூடியதாக இருக்கிறது.
இது மாத்திரம் இன்றி நாட்டின் பல இடங்களில் போராட்டங்களும் , அரசியலில் குழப்பமும் அதிகரித்து உள்ள இந்த நேரத்தில் மக்கள் மத்தியில் கொலை, தற்கொலை போன்ற பாரிய கவலைக்குரிய சம்பவங்களும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.
2021-03-03 ம் திகதி கொழும்பு – டாம் வீதியில் பயணப் பையில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் பெண் ஓருவர் சடலமாக மீட்கப்பட்டார். இவர் குருவிட்டை பகுதியைச் சேர்ந்த 30 வயதான திருமணமாகாத பெண்ணாகும்.
குறித்த சம்பவம் இலங்கையில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதன் பிறகான காலப்பகுதியிலும் பல கொலை சம்பவங்கள் பதிவாகியிருந்தன. அண்மையில், மீண்டும் இதேபோல ஒரு பெண் கொலை செய்யப்பட்டு பயணப்பையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவங்கள் தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகின்றது மெய்மை விசேட தொகுப்பு,