இலங்கை வங்கியின் முகவர் வங்கி சுண்டிக்குள உப அஞ்சல் அலுவலகத்தில் திறந்து வைப்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட நாடளாவிய 4006 தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் அலுவலகங்களில் இலங்கை வங்கியின் சேவை மையங்களை நிறுவும் திட்டத்தின் முதற்கட்டமாக வடமாகாணத்தின் 8ஆவது connect முகவர் வங்கியல் திட்டம் இன்றய தினம் காலை 10 மணியளவில் வடமராட்சி கிழக்கு முள்ளியான் உப அஞ்சல் அலுவலக முன்றலில் ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் ஆரம்பத்தில் இலங்கை வங்கியின் முகவர் வங்கியில் திட்டமானது சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து முதற் கட்டமாக முகவர் வங்கியல் திட்டத்தின் வாடிக்கையாளரின் கொடுக்கல் வாங்கல் திட்டமானது முள்ளியான் உப அஞ்சல் அதிபரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மக்கள் அடையும் நன்மைகள்
அதனை தொடர்ந்து இவ் திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் இதனால் மக்கள் அடையும் நன்மைகள் தொடர்பாகவும் இலங்கை வங்கியின் முக்கியஸ்தர்களால் மக்கள் மத்தியில் எடுத்து கூறப்பட்டது.
அத்துடன் இலங்கை வங்கியானது வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் நோக்குடனும் மற்றும் இவ் திட்டத்தின் மூலம் எதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக இலங்கை வங்கியின் கிளையினை தொடர்பு கொள்ளுமாறு வாடிக்கையாளர்களிடம் கூறப்பட்டுள்ளது.
இந்த சேவை திட்டமானது 12 மணியளவில் சுண்டிக்குளம் உப அஞ்சல் அலுவலகத்திலும் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 6 மணி நேரம் முன்

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
