ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருடன் வந்த படகுகள்: திருப்பி அனுப்பிய மலேசிய பாதுகாப்பு படையினர்(Photos)
பிலிப்பைன்ஸ் பக்கமிருந்து 42 ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருடன் மலேசியாவின் சாபா கடல் பகுதி வழியாக நுழைய முயன்ற இரண்டு படகுகளை மலேசிய பாதுகாப்புப் படையினர் திருப்பி அனுப்பி உள்ளனர்.
அவர்கள் மலேசியக் கடல் பகுதியிலிருந்து சர்வதேச கடல் பகுதிக்குள் நகர்த்தும் நடவடிக்கையை மலேசியப் படையினர் மேற்கொண்டிருக்கின்றனர்.
வான்வெளி கண்காணிப்பின் போது மூன்று படகுகள் தென்பட்டதாகவும் பின்னர் ஒரு படகு சர்வதேச கடல் பகுதி நோக்கிச் சென்று தப்பியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், இரண்டு படகுகளில் நடத்தப்பட்ட சோதனையில் முறையான பயண ஆவணங்களின்றி 14 ஆண்கள், 10 பெண்கள், மற்றும் 18 குழந்தைகள் உள்ளிட்ட 42 பேர் இருந்ததை மலேசியப் படையினர் கண்டறிந்திருக்கின்றனர்.
மலேசிய எல்லையில் பாதுகாப்பை உறுதி செய்யவும் எல்லை கடந்த குற்றங்களைத்
தடுக்கவும் கோவிட் பரவலை ஒழிக்கவும் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் நடைபெறும்
என மலேசியக் கூட்டுச் செயல் படையின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அப்துல் கரீம் அகமது
தெரிவித்துள்ளார்.







ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri
