அனுமதிக்கும் மீறிய எண்ணிக்கையில் கடலட்டை படகுகள்: அரசாங்கம் மீது குற்றச்சாட்டு
ஊழலற்ற கட்சி எனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி, 310 படகுகளுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், எப்படி 600 வரையான படகுகள் கடலட்டை பிடியில் ஈடுபட்டுள்ளது என வடக்கு மாகாண கடற்றொழில் இணையத்தின் பிரதிநிதி நாகராசா வர்ணகுலசிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று(21) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“யாழ். மாவட்டத்தில் குறிப்பாக வடமராட்சி பகுதிகளில் கடலட்டை பிடிக்க அனுமதி வழங்கக் கூடாது என நாம் குரல் குடுத்து வரும் நிலையில், 310 படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலஞ்சம்
கடலட்டை பிடிப்பதற்காக 310 படகுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், 600 வரையான படகுகள் கடலட்டை பிடியில் ஈடுபட்டுள்ளது.
அனுமதிக்கு மேலாக 300 படகுகளுக்கும் இலஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில் கடலட்டை பிடிப்பதற்காக தரித்து விடப்பட்டுள்ளன.
தடை செய்யப்பட்டுள்ள தொழில்களுக்கு இலஞ்சம் வாங்கிக் கொண்டு அமைச்சு அனுமதியளிக்கின்றது. கடல், கடற்றொழில் பற்றி தெரியாத ஒருவர் அமைச்சராக உள்ளார்.
தமிழ்க் கட்சிகள்
நாடாளுமன்றில் நேற்று விவசாயம், குளங்கள், வீதிகள் பற்றி பேசிய அமைச்சர் கடற்றொழில் பற்றி பேசவே இல்லை.
உள்ளூராட்சி சபைகளை ஆட்சி செய்வதில் தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சியமைக்க முன்வர வேண்டும்.
இனிமேலும் ஒன்று சேராமல் தமிழ் மக்களின் பிரசினைகளை கையாள முடியாது. இதனை தமிழ்க் கட்சிகள் உணர்ந்து மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan
