4 மில்லியன் செலவில் படகுகள் வழங்கி வைப்பு..! பாதுகாப்பு நடவடிக்கையை துரிதப்படுத்த கோரிக்கை
சுற்றுலாத்துறை அமைச்சினால் 4 மில்லியன் பெறுமதியான 4 படகுகள் வழங்கப்பட்ட போதிலும் , மக்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படவில்லை என நகரசபை எதிர்கட்சி உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
மட்டக்களப்பில் நேற்று(03.06.2026) நடந்த ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முறையற்ற அபிவிருத்தி செயற்பாடுகள்
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
சுற்றுலாத்துறை அமைச்சினால் 4 மில்லியன் ரூபா பெறுமதியான 4 சுற்றுலாத்துறை படகுகளை வழங்கப்பட்டன. அது வருமானத்தை அதிகரிப்பதற்காக இருந்த போதும் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற விஷயத்தில் கவனம் செலுத்தப்படவில்லை.
அந்த படகை செலுத்தும் சாரதி உண்மையில் நீச்சல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோன்று அனுமதிகள் சரியாக வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அனுமதிகள் இன்னும் வழங்கப்படவில்லை, சட்ட ஒழுங்கு பேணப்படவில்லை முறையான அனுமதிகள் வழங்கப்படுவதில்லை.

எதிர்கட்சி வேறு ஆளுங்கட்சி வேறு என பிரித்து அங்கு வேலைத் திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றதுடன், முறையற்ற விதத்தில் அரச சொத்துக்கள் பயன்படுத்தப்படுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
அண்மையில் சுற்றுலாத்துறை அமைச்சினால் படகு ஒன்று வழங்கப்பட்டு, சேவையில் இடப்பட்டது ஆனால் நகர சபை உறுப்பினர்களுக்கு உத்தியோக பூர்வமாக அழைப்பிதழ் வரவில்லை.
அதற்கு உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் திணைக்கள தலைவர்கள் எந்தவிதமான அனுமதியையும் வழங்கவில்லை இவ்வாறு எந்தவிதமான அனுமதியையும் பெறாது சட்டத்திற்கு முரணாக செயற்படுகின்றனர் என்றார்கள்.
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan