தென்னிலங்கை கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் மடக்கி பிடிக்கப்பட்ட படகு
தென்னிலங்கைக்கு அப்பால் உள்ள ஆழ்கடல் பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான பொதிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த படகொன்றை கடற்படையினர் சுற்றிவளைத்து மடக்கியுள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலையடுத்து குறித்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதன்போது படகில் ஏராளமான உரப் பைகளில் பொதி செய்யப்பட்ட மர்மப் பொருள் காணப்பட்டுள்ளதுடன், கடற்படையினர் அவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
போதைப் பொருட்கள்
குறித்த உரப் பைகளில் போதைப் பொருட்கள் பொதிசெய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

இதனையடுத்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் படகுடன் அதில் பயணித்த சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
படகும் அதில் பயணித்தவர்களும் கைப்பறப்பட்ட பொதிகளுடன் நாளை திக்ஓவிட்ட கடற்றொழில்த் துறைமுகத்துக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதன் பின்னர் பொலிசார் சந்தேக நபர்களைப் பொறுப்பெடுத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.