பங்களாதேஷில் படகு கவிழ்ந்து விபத்து - பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு
பங்களாதேஷில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தின் போது பலர் காணாமல் போயுள்ள நிலையில் பலியெண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பஞ்சகர் மாவட்டத்தில் உள்ள போடா, பஞ்ச்பீர், மரியா மற்றும் பங்கரி பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க படகு மூலம் போதேஸ்வரி கோவிலுக்கு பயணம் மேற்கொண்டனர்.

கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்த அவர்களது படகு, அதிக பாரம் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன் போது எட்டு குழந்தைகள், 12 பெண்கள் உள்பட 24 பேர் நீரில் மூழ்கி இறந்தனர் என முதல் கட்டமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது பலியெண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, வங்காள தேச அதிபர் அப்துல் ஹமீது மற்றும் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
84 நாட்கள் பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக கனி வாங்கிய சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri