வாவியில் மூழ்கி மாயமான இரு சிறுமிகளும் சடலங்களாக மீட்பு
சூரியவெவ - மஹாவெலிக்கட ஆரா வாவியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் காணாமல்போயிருந்த மூன்று சிறுமிகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்றுப் பிற்பகல் காணாமல்போயிருந்த மூன்று சிறுமிகளில் 10 வயது சிறுமியின் சடலம் நேற்று மாலை கடற்படையினரால் மீட்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை, பொலிஸ் மற்றும் கடற்படையின் சுழியோடிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், ஏனைய இரண்டு சிறுமிகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 மற்றும் 18 வயதுடைய இரண்டு சகோதரிகளே இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டனர்.

8 மாத குழந்தை உள்ளிட்ட ஐவர் உயிருடன் மீட்பு
8 பேர் பயணம் செய்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அவர்களில் எட்டு மாதக் குழந்தை உட்பட 5 பேரைப் பிரதேச மக்கள் காப்பாற்றியிருந்த போதிலும் மூன்று சிறுமிகள் காணாமல்போயிருந்தனர்.
மூவரையும் தேடி முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் போதே அவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
நேற்றுப் பிற்பகல் குருநாகலிலிருந்து சூரியவெவ பிரதேசத்தில் உள்ள உறவினர்
வீட்டுக்கு சென்ற குழு ஒன்று, மீன்பிடிப் படகு ஒன்றில் மஹாவெலிக்கட ஆர
வாவியைப் பார்வையிடச் சென்றிருந்தனர்
அதன்போது, குறித்த படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றளது.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 5 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri