முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு (photos)
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களின் நினைவாக குருதிக்கொடை வழங்கும் நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.
குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு
இந்த குருதிக்கொடை வழங்கும் நிகழ்வானது இளைஞர்கள் மற்றும் நோயாளர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் புதுகுடியிருப்பு ஆதார வைத்தியசாலை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்கள் நினைவாக இந்த குருதிக்கொடை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் தாமாக முன்வந்து குருதிக்கொடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்
வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று புதன்கிழமை(17) காலை 8.30 மணியளவில் நல்லூர் பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம் ஆரம்பித்தது.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், நல்லூர் பிரதேச செயலாளர் எழிலரசி அன்ரன் யோகநாயகன், அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் நிர்வாகிகள், அபிவிருத்தி உதிரக்கொடையாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்தி: தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




