யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இரத்ததான முகாம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நடைபெற்றுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தில் இன்றையதினம் (2.12.2023) குறித்த இரத்ததான முகாம் விளையாட்டு விஞ்ஞான அலகால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழிப்புணர்வு நடைபவனி
மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் என பலரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் விளையாட்டு விஞ்ஞான அலகின் ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை ‘உடல் உறுதி நோக்கிய நடை’ எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனி காலை 8 மணியளவில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகானது 1998 இல் ஆரம்பிக்கப்பட்டு
இற்றைக்கு 25 வருடங்களை பூர்த்தி செய்து வெற்றிகரமாக பல நூறு விளையாட்டுத்துறை
சார்ந்த விற்பன்னர்களை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.