றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் இரத்ததான முகாம்: பொதுமக்களுக்கு அழைப்பு
றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை வளாகத்தில் இரத்ததான செய்வதற்கான முகாம் ஒன்ற ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகப்பணியின் ஒரு உயர்ந்த அங்கமாக றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை கடந்த வருடம் (2025/03/22) முதல் இரத்ததான முகாமை ஆரம்பித்து சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது.
இரத்ததான முகாம்
இந்த முயற்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்படும் நோயாளிகளுக்குத் தேவையான இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் மிகவும் பெரும் ஆதரவாக அமைந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, இந்த வருடத்திற்கான இரத்ததான முகாம் 22ஆம் திகதி பங்குனி மாதம் 2026 (2026/03/22) அன்று றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை வளாகத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைவரும் தங்கள் உயர்ந்த பங்களிப்பை வழங்கி, இரத்ததானம் செய்வதன் மூலம் உயிர்களை காக்கும் உன்னத பணியில் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த தகவலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை இரத்தவங்கி உறுதிப்படுத்துகிறது.
அத்துடன், மேலதிக விவரங்களை (021) 226 1345 என்ற இலக்கத்திற்கு அழைத்து தெரிந்துக் கொள்ளலாம்.
