மட்டக்களப்பில் பார்வை இழந்த மாணவி புலமை பரிசில் பரீட்சையில் சித்தி
இன்று வெளியான ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் பரீட்சைக்கு தோற்றிய பார்வை இழந்த மாணவியொருவர் சித்தியடைந்துள்ளார்.
மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டில் கல்வி பயிலும் ரவிச்சந்திரன் ஜெனிபர் என்கின்ற மாணவியே இவ்வாறு பரீட்சையில் சித்தியடைந்தவராவார்.
பரீட்சையில் சித்தி
மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையில் கல்வி கற்று வரும் இவர் 88 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளதாக விவேகானந்தா மகளிர் கல்லூரி பிரதி அதிபர் தம்பிராசா சிவக்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி மாணவர்களுக்கான வெற்றி புள்ளி 132 ஆக இருந்தபோதிலும் விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான வெற்றி புள்ளி எண்பதாகும்.
குறித்த மாணவி 88 புள்ளைகளை பெற்று வெற்றுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற நிலையில் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








உலகின் சக்திவாய்ந்த டாப் 10 பாஸ்போர்டுகள்: அமெரிக்கா, சீனா இல்லை.. முதலிடம் பிடித்த நாடு எது? News Lankasri
