ஈரானில் பாரிய குண்டுவெடிப்பு: 100ற்கும் மேற்பட்டோர் பலி
ஈரானில் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புகளில் 103 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளிட்டுள்ளன.
இந்த குண்டுவெடிப்பு சம்பவமானது ஈரானின் கெர்மான் நகரில் இடம்பெற்றுள்ளது.
நான்கு வருடங்களிற்கு முன்னர் ஈராக்கில் அமெரிக்காவின் ஆளில்லா விமானதாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் இராணுவ அதிகாரி கசேம்சுலைமானியின் நினைவேந்தல் நிகழ்விலேயே குறித்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குண்டு வெடிப்பு
இதன்போது 171 பேர் காயமடைந்துள்ளதுடன் 103 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்துநிமிட இடைவெளியில் இரண்டு குண்டுகள் வெடித்தன என சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவித்துள்ளதுடன் நான்கு குண்டுகள் வெடித்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
இந்நிலையில் இராணுவ அதிகாரி சுலைமானியின் உடல் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து 700 மீற்றர் தூரத்தில் முதலாவது குண்டு வெடித்தது இரண்டாவது குண்டு 1 கிலோமீற்றர் தூரத்தில் வெடித்தது என தகவல்கள் வெளியாகியுள்ளளன.

இரண்டு குண்டுகள் தொலைவிலிருந்து வெடிக்கவைக்கப்பட்டன என தெரிவித்துள்ள அதிகாரிகள் இது பயங்கரவாத தாக்குதல் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan