ஜெனிவாவை இலக்குவைத்து இலங்கை மீது கறுப்புப்புள்ளி! இராஜாங்க அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பமாகும் வேளையில், இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பில் கறுப்புப் புள்ளியை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் இன்றளவிலும் தொடர்கின்றன என்று இராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"சமூக ஊடகங்களைப் பயன்படுத்திப் போலித்தகவல்களைச் சமூகமயப்படுத்தும் நடவடிக்கை இன்னும் நிறுத்தப்படவில்லை.
குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும் காலப்பகுதியில், இலங்கையில் மனித உரிமை நிலவரம் தொடர்பில் கறுப்புப் புள்ளியை ஏற்படுத்துவதற்குச் சில குழுக்கள் திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்டு வருகின்றன.
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரம் மீண்டெழுவதை அந்தக் குழுக்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதனால் சமூகவலைத்தளங்களில் கடத்தல்கள் பற்றியும் ஏனைய விடயங்கள் பற்றியும் பதிவிடப்படுகின்றன.
இவ்வாறான நடவடிக்கை தனிநபருக்கு இலாபமாக இருக்கலாம். ஆனால், இராஜதந்திர மட்டத்தில் அது நாட்டுக்குத் தாக்கமாகவே அமையும்.
எனவே, ஊடகங்களுக்கு ஒழுக்கக்கோவை இருப்பதுபோல் சமூக ஊடகங்களுக்கும் அவ்வாறான ஒழுக்கக்கோவை அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 3 மணி நேரம் முன்
லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட் News Lankasri
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam