கருப்பு ஜூலை பயங்கரவாத அச்சுறுத்தல் உறுதிப்படுத்தப்படவில்லை - பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு
கறுப்பு ஜூலை பயங்கரவாத அச்சுறுத்தல் உறுதிப்படுத்தப்படவில்லை, எனினும், அது நிராகரிக்கப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தீவிரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கூறப்படும் உளவுத்துறை தகவல் தொடர்பாக பாதுகாப்பு செயலாளருக்கு, பொலிஸ்மா அதிபர் அனுப்பிய கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கறுப்பு ஜூலையை முன்னிட்டு இம்மாதம் 05 மற்றும் 06ஆம் திகதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலனாய்வு வட்டாரங்கள் மூலம் பெறப்பட்ட உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் இத்தகைய தாக்குதல் குறித்த அச்சம் எழுப்பப்பட்டன. "
இவை சரிபார்க்கப்படாத புலனாய்வுத் தகவல்கள். கருப்பு ஜூலை போன்று பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய எந்த அடிப்படைத் தகவலும் இல்லை. இதுபோன்ற தாக்குதல் பயங்கரவாத குழுக்களால் நடத்தப்படலாம்.
அத்துடன், அரசாங்கத்திற்கு எதிரான குழுக்கள் அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்கும் ஸ்திரமின்மைக்கு உள்ளாக்குவதற்கும் வன்முறையைத் தூண்டக்கூடும் என்று தெரிவிக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொது மக்கள் அச்சமடைய தேவையில்லை
எவ்வாறாயினும், பயங்கரவாத தாக்குதல் ஒன்றோ அல்லது நாசகார செயல் ஒன்றோ இடம்பெறலாம் என பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு செயலாளருக்கு அறிவித்துள்ள கடிதம் ஒன்று பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் மக்கள் வீணாக அச்சமடைய தேவையில்லை என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு மக்கள் குறித்த தகவல் தொடர்பில் அச்சமடைய வேண்டியதில்லை எனவும் கிடைக்கப்பெற்றுள்ள தகவல் தொடர்பில் பூரண விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.