கறுப்பு ஜூலை விவகாரம் : ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு யோசனைக்கு ஆளும் தரப்பு எதிர்ப்பு

Parliament of Sri Lanka Selvam Adaikalanathan Harshana Nanayakkara
By Rakesh Oct 10, 2026 03:25 AM GMT
Report

கறுப்பு ஜூலை சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என்ற யோசனைக்கு எதிர்ப்பைப் பதிவு செய்கின்றேன்.மக்கள் பிரதிநிதிகளின் பங்குப்பற்றலுடன் தெரிவுக்குழு ஒன்றை அமைத்தால் சிறந்த தீர்மானத்தை எடுக்கலாம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(09.10.2026) நடைபெற்ற அமர்வின்போது, 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனக்கலவரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

சுதந்திரத்துக்குப் பின்னரான காலப்பகுதி

அங்கு மேலும் உரையாற்றுகையில், "இந்த நாட்டில் யாரும் சிறுபான்மையினத்தவர்கள் அல்லர். இனத்தாலும் பிறப்பாலும் ஒருவரை சிறுபான்மை என்று குறிப்பிடுவது மனித குலத்துக்கு எதிரானது.

கறுப்பு ஜூலை விவகாரம் : ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு யோசனைக்கு ஆளும் தரப்பு எதிர்ப்பு | Black July Issue Presidential Commission Inquiry

இந்த நாட்டில் சிங்கள மக்கள் மத்தியிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் கோபமும் வெறுப்பும் காணப்படுகின்றது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு வரலாற்று ரீதியிலான தவறுகள் பிரதான காரணமாகக் காணப்படுகின்றன.

1948.02.04 ஆம் திகதி சுதந்திரம் பெற்ற போது இனவாரி பிரதிநிதித்துவத்தில் காணப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்டப்படவில்லை.

1949 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டு, இலங்கையில் வாழ்ந்த இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் நாடேற்றப்பட்டார்கள். அவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. இதன் தாக்கம் இன்றும் தொடர்கின்றது.

சுதந்திரத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற தவறுகளினால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். 1979 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது, யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் உருவானது. பல விளைவுகளும் இதனால் ஏற்பட்டன.

இதுதான் இலங்கையின் கடந்த காலத்தின் ஒருசில வரலாற்றுச் சம்பவங்களாகும். இந்தக் கசப்பான காலத்தைக் கடந்து நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க வேண்டும். இதுவொன்றும் இலகுவல்ல. நல்லிணக்கத்துக்கான உண்மையை கண்டறிய வேண்டும். 

சட்டங்களைத் திருத்தம் செய்ய

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அமைப்பதற்காகவே செல்வம் அடைக்கலநாதன் தனிநபர் பிரேரணையை முன்வைத்துள்ளார்.

இதற்கு இணையாகப் பிறிதொரு யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

கறுப்பு ஜூலை விவகாரம் : ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு யோசனைக்கு ஆளும் தரப்பு எதிர்ப்பு | Black July Issue Presidential Commission Inquiry

நாடாளுமன்ற உறுப்பினர்களில் 52 பேர் கையொப்பமிட்டு சபாநாயகருக்கு யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்கள். இதற்கமைய நாடாளுமன்றச் செயற்குழு ஒன்றை நியமிக்க முடியும்.

நாடாளுமன்றத்தால் நியமிக்கப்படும் நாடாளுமன்றச் செயற்குழுவில் சகல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் உள்ளடங்குவார்கள். பரிந்துரைகளை அனைவரும் ஒன்றிணைந்து தயாரிக்கலாம்.

சட்டங்களைத் திருத்தம் செய்ய ஒன்றிணைந்து செயற்படலாம். இதற்கமைய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைக்கும் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறேன்.

ஏனெனில், ஜனாதிபதி ஆணைக்குழுவைக் காட்டிலும் நாடாளுமன்றச் செயற்குழுவை அமைப்பது வெளிப்படைத்தன்மையானதாக அமையும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்.. வெளியான அதிர்ச்சி பின்னணி

கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்.. வெளியான அதிர்ச்சி பின்னணி

அரச வங்கியில் இடம்பெற்றுள்ள பாரிய நிதி மோசடி.. வசமாக சிக்கிய இளம் அதிகாரி

அரச வங்கியில் இடம்பெற்றுள்ள பாரிய நிதி மோசடி.. வசமாக சிக்கிய இளம் அதிகாரி

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US