கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நாள்! - நீதி கோரி யாழில் போராட்டம்
ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனப் படுகொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
'கறுப்பு ஜூலை 23' நினைவு நாளை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணிமுதல் முற்பகல் 11 மணி வரை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், "கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நாள்", "கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?", "இன அழிப்புக்கு நீதி வேண்டும்", "அரசியல் கைதிகளை விடுதலை செய்", "வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு" உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

பராசக்தி படத்திற்கு எதிராக மோசமான விமர்சனங்களை பரப்பும் நபர்கள்.. கொந்தளித்த பராசக்தி பட நடிகர் Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam