கறுப்பு யூலை: தமிழ் இனப்படுகொலையின் 39ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு (Photos)
1983ம் ஆண்டில், இதே யூலை மாதத்தில் இலங்கை முழுவதும் இலங்கை அரச பயங்கரவாதத்தினால் தமிழர்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் 39வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் - மாவிட்டபுரம் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நினைவஞ்சலி இன்று நடைபெற்றது.
இந்நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அத்துடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட அலுவலத்திலும் நாடு இன்று எதிர்கொள்ளும் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு வித்திட்ட கறுப்பு யூலை தமிழ் இனப்படுகொலையின் 39ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ். மாநகர முதல்வருமாகிய வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் உள்ளூராட்சி மன்றஉறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.







