வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்த பா.ஜ.க
இந்தியாவின் டெல்லி பேரவைத் தேர்தல் வெற்றியானது வரலாற்று சிறப்புமிக்கது என்று அந்நாட்டு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் டெல்லி பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே மொடி இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் பேசியதாவது,
சாதாரண வெற்றி
“பாஜக டெல்லியில் வென்றது சாதாரண வெற்றி அல்ல, வரலாற்று சிறப்புமிக்கது. டெல்லியில் தாமரை மலராத பகுதியே இல்லை.
எல்லா மொழி பேசும் மக்களும் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். தொலைநோக்கு பார்வை, நம்பிக்கை வென்றுள்ளது.
டெல்லியை சொத்தாக கருதியவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர். தாங்கள்தான் டெல்லியின் உண்மையான உரிமையாளர்கள் என்பதை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
டெல்லியை சூழ்ந்த ஆடம்பரம், அராஜகம், ஆணவம் தோற்கடிக்கப்பட்டன. டெல்லி இனி இரட்டை வேகத்தில் வளர்ச்சிப் பெறும்" என்றார்.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.
சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் பாஜக தனிப்பெரும்பான்மையை பாஜக பெற்றுக்கொண்டுள்ளது.
மொத்தமுள்ள 70 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 36இல் வென்றால் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கலாம்.
இதற்னமைய நிலவரப்படி, பாஜக 47 தொகுதிகளில் வெற்றிபெற்று, ஓரிடத்தில் முன்னிலை வகித்தது.
கடந்த 10 ஆண்டு காலமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஆம் ஆத்மி 28 இடங்களில் வென்றுள்ளது. 2020 தேர்தலில் அந்தக் கட்சி 70ல் 62 தொகுதிகளைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan

HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri
