பாஜக கூட்டணி ஆட்சி வெற்றிக்கு கை விரலை வெட்டி காணிக்கை செலுத்திய நபர்
நடந்து முடிந்த இந்திய மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர் ஒருவர் தன்னுடைய கைவிரலை வெட்டி காணிக்கை செலுத்திய அதிர்ச்சிகர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்படி கடந்த 4ஆம் திகதி வெளியான தேர்தல் முடிவுகளில் பாஜக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது.
அறுவை சிகிச்சை
குறித்த தினத்தில் இந்தியா கூட்டணி முன்னணி வகிக்கிறது என தெரிந்ததும் மன உளைச்சலுக்கு ஆளான துர்கேஷ் பாண்டே(வயது 30) சத்தீஸ்கரில் உள்ள காளி கோயிலுக்கு சென்றுள்ளார்.

கோவிலில் மனமுறுகிய அவர் பிரார்த்தனை செய்ததுடன் பாஜக வெற்றி பெற வேண்டியுள்ளார். மாலை வேளையில் இந்திய கூட்டணியின் வெற்றி உறுதியானததை தொடர்ந்து, மகிழ்ச்சியடைந்த துர்கேஷ் பாண்டே, கோயிலுக்கு சென்று தனது இடது கை விரலை வெட்டி காணிக்கை செலுத்தியுள்ளார்.

கையில் இருந்து இரத்தம் வழிந்து ஓட, வலியால் துடிதுடித்த துர்கேஷ் பாண்டேவை அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து அம்பிகாப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு அழைத்து செல்லப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபோன்ற விபரீதங்களில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri