ஈழத் தமிழர்களை வெளியேற்றத் துடிக்கும் இந்திய அரசு! திராவிட வெற்றிக் கழகம் வலியுத்தியுள்ள விடயம்

Tamils Sri Lanka India
By Bavan Oct 30, 2026 11:57 AM GMT
Report

ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசின் நடவடிக்கைகளுக்கு துணை போகும் வகையில் இந்தியாவில் உள்ள ஈழத் தமிழர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக வெளியேற்றத் துடிக்கும் இந்திய அரசின் நடவடிக்கைகள் தமிழின விரோதப் போக்காகும். பாஜக அரசும் தமிழக தவெக அரசும் உடனடியாக கைவிட வேண்டும் என திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சி. ஏ சத்யா வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் உள்ள திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சி .ஏ. சத்யா ஊடக அறிக்கை ஒன்றை நேற்று (29.10.2026) வெளியிட்டுள்ளார்.

நாதியற்று போனதா தமிழினம், இலங்கையில் சிங்கள பேரினவாத அரசு இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தும் காணமல் ஆக்கப்பட்டும் சொல்லோன்னா துயரங்களுக்கு ஆட்பட்டு நாட்டுரிமைப் பறிக்கப்பட்ட நிலையில் தாயின் மடியென தமிழ்நாட்டிலும் உலக நாடுகள் பலவற்றிக்கு ஏதிலிகளாக குடிபெயர்ந்து உள்ளனர்.

நீதிமன்றங்கள் தண்டனை

அந்த வகையில் 2009 ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலை புலிகளின் துப்பாக்கிகள் மவுனித்தற்கு பின்னர் போராளிகள் இலங்கை தீவில் வாழ முடியாத சூழலில் பல்வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்து அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கௌரவத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் தாயின் மடியென தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்த எமது தொப்புள் கொடி உறவுகளை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் ஈவ இரக்கமின்றி மனிதாபிமான மில்லாமல் நடத்துவதும் சிறப்பு முகாம் என்ற பெயரில் நீதிமன்றங்கள் தண்டனை வழங்காமலே இந்த சிறப்பு சித்திரவதை முகாம்களில் ஆண்டு கணக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2016 ஆம் ஆண்டு திருச்சி சிறப்பு முகாமில் அடைப்பட்டு இருந்த ஈழத்தமிழர் கிருஷ்ணகுமாரை அவரின் விருப்பத்திற்கு மாறாக எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இலங்கைக்கு நாடு கடத்தி இருப்பது ஜெனிவா ஒப்பந்தத்தை மீறும் செயலாகும்.

மீண்டும் ஒரு ஈழத்தமிழர் சுபாஸ்கரனையும் அவரின் விருப்பத்திற்கு மாறாக நாடுகடத்த ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் அவளிவருகின்றது. இது மனிதாபிமான மற்ற செயல் இதை பா.ஜ.க அரசும் தமிழக த.வெ.க அரசும் கைவிட வேண்டும் என திராவிட வெற்றிக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றேன்.

39 ஆண்டுகளுக்கு முன்பு 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 05 ஆம் தேதி அன்று இந்திய இலங்கை கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் தளபதிகள் லெப்டினன்ட் கர்னல் குமரப்பா லெப்டினன்ட் கர்னல் புலேந்திரன் உள்ளிட்ட 17 பேரை கைது செய்து பலாலி விமான நிலையத்தில் சிறை வைத்து இந்திய அமைதிப் படை விடுதலைப் புலிகளை சுற்றி முற்றுகை வளையம் போட்டிருந்தது.

இனப்படுகொலை

இதன்போது அந்த மாவீரர்கள் தங்களை இந்திய இராணுவம் கைது செய்து சிறைப்படுத்தினால் உடன்படுவோம் மாறாக சிங்கள இராணுவத்திடம் ஒப்படைத்தால் நஞ்சறுந்தி வீரச்சாவைத் தழுவோம் என்று எச்சரித்து கையில் ஆயுதம் இருந்தும் அமைதி ஒப்பந்தத்தை மீறக்கூடாது என்று எதிர் தாக்குதல் நடத்தாமல் அமைதியாக இருந்தவர்களின் முற்றுகையை அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசின் தவறான அறிவுறுத்தல் காரணமாக இந்திய அமைதிப் படை முற்றுகையை விளக்கியவுடன் சிங்கள இராணுவம் 17 விடுதலைப் புலிகளை சுற்றி வளைத்து தாக்கி கைது செய்ய முனைந்த போது சயனைடு குப்பிகளைக் கடித்து குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 விடுதலைப் புலி வீரர்கள் வீரச்சாவைத் தழுவினார்கள்.

சர்வதேச அரங்கில் இன்று வரை இந்தியாவை காங்கிரஸ் கட்சியைத் ஈழத் தமிழர்கள் குற்றவாளி கூண்டில் நிறுத்துகின்றனர். என்பதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசுக்கும் தமிழ் நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க அரசுக்கும் நினைவூட்ட விரும்புகின்றேன்.

ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசின் நடவடிக்கைகளுக்கு துணை போகும் வகையில் இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக வெளியேற்றத் துடிக்கும் இந்திய அரசின் நடவடிக்கைகள் தமிழின விரோதப் போக்காகும்.

இதைத் தமிழ்க் கூறும் நல்லுலகம் ஒருபோதும் ஏற்காது ஈழத் தமிழர் ஆதரவு என்பது நீறுபூத்த நெருப்பாக என்றும் கனன்று கொண்டு இருக்கிறது முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியர்கள் ஊட்டிய இனமான நெருப்பு நெஞ்சில் எரிந்து கொண்டு இருக்கிறது என்பதை எச்சரிக்க விரும்புகின்றேன்.

எனவே ஈழத் தமிழர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக வெளியேற்றும் நடவடைக்கையை ஒன்றிய பாஜக அரசும் தமிழக தவெக அரசும் உடனடியாக கைவிட வேண்டும் என்று திராவிட வெற்றிக் கழகத்தின் சார்பில் மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றேன்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை என்றார் வள்ளுவர் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US