அறிவித்தலை ஆயர்கள் மீளப்பெற வேண்டும்: அருட்தந்தை மா.சத்திவேல்
சமயம் கடந்து இறந்தவர்களை நினைவு கூருவோம் எனும் அறிவித்தலை வடக்கு, கிழக்கு ஆயர்கள் மீளப் பெற்றுக் கொள்ளுமாறு கௌரவத்தோடு வேண்டுகோள் விடுப்பதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும்,
இம்மாதம் 20ஆம் திகதி "மதங்களைக் கடந்து இறந்தவர்களை நினைவு கூருவோம்" என வடக்கு, கிழக்கு ஆயர்கள் கூட்டாக அறிவித்திருப்பது தமிழர் தாயகம் மீது அரசியல் தாகம் கொண்டவர்களை, மாவீரர்களைத் தியாகிகளாக ஆத்மீக ரீதியில் உணர்வுப்பூர்வமாக அர்ச்சித்து எழுச்சியோடு நினைவு கூருபவர்களை பல்வேறு சந்தேகத்திற்கும், வேதனைக்கும், கோபத்திற்கும் உள்ளாக்கி இருப்பதால் இவ்வறிவித்தலை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.
மே மாதம் 18ஆம் திகதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தம் உறவுகளை வடக்கு, கிழக்கு மக்களும், புலம்பெயர் தமிழர்களும் அஞ்சலி செலுத்துகின்றனர். அத்தினத்தில் அரசியல் நீதிக்கான அவசரத்தையும் வலியுறுத்திச் செயற்படுகின்றனர்.
கத்தோலிக்கத் திருச்சபை அருட்தந்தையர்களும் நினைவு கூர்தலில் துணிச்சலோடு முன் நின்று செயல்பட்டுக் கொள்கின்றனர். அதுமட்டுமல்ல முன்னாள் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் அடிகளார் தமிழர்களின் அரசியல் குரலாக ஒலித்தவர். இவரை தமிழர்கள் நன்றியோடு பார்க்கின்றனர்.
இந்நிலையில் மாவீரர் வாரம் என்பது இறந்தவர்களை நினைவு கூறும் காலம் அல்ல. தமிழர்களின் தாயக அரசியலுக்காக உயிர்த்தியாக மானவர்களை, தமிழர் தாயக மண்ணில் வித்தாகி தமிழர் உள்ளங்களில் உயிர்ப்போடு வாழ்ந்து எமது அரசியலை இன்னும் கூர்மைப்படுத்துகின்ற தியாகிகளுக்குத் தியாகச் சுடரை ஏற்றி கௌரவப்படுத்துகின்ற வாரமாகும்.
இத்தகைய புனித வாரத்தின் முதல் நாள் இறந்தவர்களை நினைவு கூருவோம் என அழைப்பு விடுப்பது மாவீரர் குடும்பங்களையும், அவர்களைத் தியாகிகளென, புனிதர்களென நினைக்கின்றவர்களை மட்டுமல்ல மாவீரர்களையும் அவர்கள் எந்த அரசியலுக்காகத் தியாகமானார்களோ அந்த அரசியலையும் அவமதிக்கின்ற செயலுமாகும்.
தமிழர்களின் அரசியல் போராட்ட வரலாற்றில் உயிர்த் தியாகிகள் ஆன அருட்தந்தையர்கள் போராட்டக் களத்தில் நின்றவர்கள் என நூற்றுக்கணக்கான கத்தோலிக்கர்கள் உள்ளனர். அதேபோன்று காணாமற்போன கத்தோலிக்கர்களும் உள்ளனர்.
இவர்களுக்காக நினைவு நாளை அறிவிக்காத திருச்சபை மாவீரர் வாரத்தின் முதல் நாள் நினைவு நாளாக அறிவித்தது ஏன்? தமிழர் தாயகத்தையும் தமிழர் தாயக தேசிய அரசியலையும் சிதைக்க சர்வதேச சக்திகளும், உள்ளூர் சக்திகளும் கைகோர்த்து நிற்கின்ற காலம் இது.
தமிழர்கள் 30 வருடங்களுக்கு முன்பே ஏற்றுக்கொள்ளாத மாகாணசபையை முழுமையாக உட்படுத்துமாறு அழிவு சக்திகள் கூடுகின்ற காலங்களில், இன்னும் ஒரு பக்கம் ஒரே நாடு ஒரே சட்டம் என இனவாத காவியின் கையில் இன அழிப்பைத் தீவிரமாகத் திட்டமிடுகின்றனர்.
இந்நிலையில் இறந்தவர்களை நினைவு கூர மாவீரர் வாரத்தின் முதல் நாளை அறிவிப்பதன் மூலம் ஆயர்களும் எமக்கு எதிரான சக்திகளோடு மறைமுகமாகக் கைகோர்த்து எனது அரசியல் உணர்வையும் தியாக வரலாற்றையும் நீர்த்துப்போகச் செய்வதற்கான செயற்பாடுகளில் ஒன்றாகும் எனச் சந்தேகம் கொள்ள வைக்கின்றது.
அத்தோடு வேறு சமயத் தலைமைகளையோ, பொது அமைப்புக்களையோ கலந்துரையாடாது இத்தகைய பொது அறிவித்தலை விடுப்பது அவர்களை அவமதிப்பதாக அமைந்திருப்பதோடு தன்னிச்சையாக அறிவிப்பு செய்திருப்பது தமிழர்கள் மத்தியில் இன்னுமொரு பிளவையும் ஏற்படுத்தி விடலாம் என்பதையும் சிந்திக்கத் தவறியது வேதனைக்குரியது.
ஆதலால் மாவீரர் வாரத்தின் புனிதம், மாவீரர்களின் தியாக வரலாற்றை அடுத்த
சந்ததிக்குக் கடத்தும் செயற்பாடு, தாயக அரசியலுக்கான கூட்டுச் செயற்பாடு என்பன
கருதி "சமயம் கடந்து இறந்தவர்களை நினைவு கூருவோம்" எனும் அறிவித்தலை வடக்கு, கிழக்கு
ஆயர்கள் மீளப் பெற்றுக் கொள்ளுமாறு கௌரவத்தோடு வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
