அரச புலனாய்வு சேவை பணிப்பாளரின் முறைப்பாட்டு - அருட்தந்தை விசாரணைக்கு அழைப்பு
அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் சுரேஷ் சாலே செய்த முறைப்பாடு சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக அருட் தந்தை சிறில் காமினியை இன்று குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு வருமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அருட் தந்தை சிறில் காமினி, அருட் தந்தை ரொஹான் சில்வா உட்பட கத்தோலிக்க மதகுருமார் சூம் தொழிநுட்பம் மூலம் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற சர்வதேச நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருட் தந்தை சிறில் காமினி உட்பட கத்தோலிக்க மதகுருமார் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றும் போது அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் சுரேஷ் சாலே குறித்து பொய்யான தகவல்களை முன்வைத்தனர் எனவும், தான் மற்றும் தனது குடும்பத்தினருக்கு உயிராபத்து ஏற்படும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை குறித்து விசாரணை நடத்துமாறு சுரேஷ் சாலே கடந்த 25 ஆம் திகதி குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்தார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் கூறியுள்ளது.
இந்த முறைப்பாடு சம்பந்தமாக குற்றவியல் விசாரணை திணைக்களம் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்த பின்னர், அருட்தந்தை சிறில் காமியை விசாரணைகளுக்கு சமூகமளிக்குமாறு அழைப்பாணை விடுத்துள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
