கோவிட் காரணமாக இலங்கையில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி
கோவிட் பெருந்தொற்று நிலைமை காரணமாக நாட்டில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுதேச மருத்துவ ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கோவிட் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார கட்டுப்பாடுகளினால் திருமண வைபவங்கள் நடைபெறுவதில்லை எனவும் இதுவே பிறப்பு வீத வீழ்ச்சிக்கான பிரதான ஏதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டு தோறும் இலங்கையில் சுமார் 350,000 குழந்தை பிறப்புக்கள் பதிவாகும் எனத் தெரிவித்துள்ளார்.
எனினும், திருமண வைபவங்கள் நடாத்தப்படாத காரணத்தினால் கடந்த ஓராண்டு காலமாக குழந்தை பிறப்புக்கள் வரையறுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் காரணமாக சுமார் 3500 பேர் உயிரிழந்துள்ளதாகவும், வருடாந்தம் 350,000 பிறப்புக்கள் இதனால் தடைப்படுவதாகவும் அவர் கொழும்பு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
