செம்மணி மனித அவலத்திற்கு நீதி.. உறுதியளித்த அமைச்சர்
செம்மணி மனித அவலத்திற்கு தீர்வை பெற்று கொடுப்போம் என அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பதவி நீக்கப் பிரேரணை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், "மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை அரசாங்கமே மேற்கொள்கின்றது. அதற்கு எவ்வித தடைகளையும் மேற்கொள்ளவில்லை. அதேபோல நீதிமன்றத்தின் கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது.
நாங்கள் ஆட்சிக்கு வரும் போது சிறிதாக தோன்றப்பட்டிருந்தது. இப்போது நாங்கள் 130 என்பு எச்சங்களை எடுத்துள்ளோம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் இனவாத கருத்துக்காகவே நான் இதை சொல்கின்றேன். நாங்களே வடக்கில் அதிக வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளோம்.
காபன்டேடிங் ஆய்வு கூடம்
தென்னிலங்கை ராஜபக்சக்களின் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏதாவது ஒரு சம்பவம் தேவை. அவ்வாறே பொன்னம்பலம் போன்றவர்களின் சிந்தனையும் இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தனது எக்ஸ் தளத்தில் இலங்கையில் இருந்து செல்லும் போது, இந்த அரசாங்கத்தில் பூரண நம்பிக்கை உண்டு என பதிவிட்டுள்ளார். அவர் எங்கள் கட்சி அலுவலகத்திற்கு வந்த சந்தர்ப்பத்தில், எமக்கு காபன்டேடிங் ஆய்வு கூடம் ஒன்றை தாருங்கள் என கோரினோம்.
ஏனென்றால் இந்த என்பு எச்சங்களை காபன்டேடிங் செய்ய காலம் எடுப்பதாக சொன்னோம். இது மட்டுமல்ல நிறைய மனித புதைகுழிகள் இருக்கிறன. மாத்தளை, மன்னார் சதோச கட்டட அடியில், திருகேதிஸ்வதம், மண்டத்தீவு, கொக்குத்தொடுவாய் போன்ற மனிதப் புதைகுழிகள்.
அதை பற்றி யாரும் கதைப்பதில்லை. நான் அனைத்து இடங்களுக்கும் சென்றிருக்கிறேன். ஆனால் கமராவுடன் அல்ல. தென்பகுதியில் இன நல்லிணக்க அரசாங்கம் ஏற்பட்டதே இவர்களுக்குள்ள பிரச்சினையாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
