இலங்கையின் மேம்பாட்டு திட்டங்களுக்காக உதவ முன்வரும் பில் கேட்ஸ்
பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இலங்கையில் தனது உதவித் திட்டங்களை முன்னெடுக்க தயாராகி வருகின்றது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(13.12.2024) இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து பேசப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள், ஊட்டச்சத்து செயற்றிட்டங்கள், பாடசாலை மாணவர்களுக்கான உணவுத் திட்டங்கள் விவசாய நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள் மற்றும் கால்நடை மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான நிதியை வழங்க கேட்ஸ் அறக்கட்டளை சம்மதித்துள்ளது.
புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு
தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அறக்கட்டளையின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, புதிய அரசாங்கத்தின் முன்னுரிமைகளை உணர்ந்து ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக கேட்ஸ் அறக்கட்டளை உறுதியளித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
