இலங்கை மத்திய வங்கி தொடர்பில் சமர்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம்
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) தன்னிச்சையான சம்பள உயர்வை நீக்குவது தொடர்பான சட்டமூலத்தை பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை அமைச்சர் இன்று (13.03.2024) நாடாளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்னவிடம் கையளித்துள்ளார்.

உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் குதித்த வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட தரப்பினர்
சம்பள உயர்வு
கம்மன்பிலவால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த சட்டமூலத்தில் மத்திய வங்கியின் தன்னிச்சையான சம்பள உயர்வை இரத்து செய்வதுடன், மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நிதி அமைச்சரின் அனுமதியை கட்டாயமாக்குவது தொடர்பாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தேச சட்டமூலத்தை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, குறித்த சட்டமூலத்தை சட்டமா அதிபரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 23 மணி நேரம் முன்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri
