பிரகாசிக்கத் தவறிய இலங்கை வீரர்கள்: சவால் விடுத்த பங்களாதேஷின் பந்துவீச்சு
புதிய இணைப்பு
பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 48.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 255 ஓட்டங்களை பெற்றுகொண்டுள்ளது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஜனித் லியனகே 69 பந்துகளுக்கு 67 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
மேலும், 75 பந்துகளை எதிர்கொண்ட அணித்தலைவர் குஷல் மெண்டிஸ் 59 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், டஸ்கின் அஹ்மத் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் தடுமாற்றம்
அத்துடன், பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட தஸ்கின் அஹ்மத், ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஹசன் சகிப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
அதேவேளை, 40 ஓவர்கள் முடிவில் 220 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து ஓரளவு வலுவான நிலையில் இருந்த இலங்கை அணி, 255 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது
முதலாம் இணைப்பு
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஸஹர் அஹ்மத் சவுத்ரி அரங்கில் நடைபெற்று வருகின்றது.
போட்டியில் இன்றையதினம் (13.03.2024) நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 71 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஒரு நாள் தொடர்
பங்களாதேஸுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை 2 - 1 என்ற வித்தியாசத்தில் இலங்கை அணி கைப்பற்றியிருந்தது.
இந்நிலையிலேயே, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது.
மேலும், ஆண்களுக்கான ஐசிசியின் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இலங்கை 7ஆவது இடத்திலும் பங்களாதேஸ் 8 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
