வடக்கின் பெரும் சமர்: யாழ். பரியோவான் கல்லூரி அபார வெற்றி

Jaffna Cricket Northern Province of Sri Lanka Sri Lankan Schools
By Theepan Mar 09, 2024 08:04 PM GMT
Report

117ஆவது முறையாக நடைபெற்ற வடக்கின் பெரும் சமர் கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் பெரும் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில் யாழ். மத்திய கல்லூரி 157 ஓட்டங்களையும், பரியோவான் கல்லூரி 228 ஓட்டங்களையும் தனது முதல் இன்னிங்ஸில் பெற்றிருந்தன.

இதனையடுத்து தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வந்த யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி அணி 140 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது.


இரண்டாம் இன்னிங்ஸ்

தொடர்ந்து போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் பரியோவான் கல்லூரி அணியை விட 69 ஓட்டங்கள் முன்னிலை அடைந்தவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடர்ந்த யாழ். மத்திய கல்லூரி 57.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 149 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் யாழ். மத்திய கல்லூரி அணியின் பின்வரிசை துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக விக்னேஸ்வரன் பருதி 20 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

வடக்கின் பெரும் சமர்: யாழ். பரியோவான் கல்லூரி அபார வெற்றி | Jaffna Central College St John S College Big Match

அதேவேளை பரியோவான் கல்லூரி அணியின் பந்துவீச்சில் கிருபானந்தன் கஜகர்ணன், ஜெயச்சந்திரன் அஷ்னாத் மற்றும் ஸ்டான்லி சேம்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றியிருந்தனர்.

யாழ். மத்திய கல்லூரியின் இரண்டாம் இன்னிங்ஸை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக 79 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.

குறித்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய யாழ். பரியோவான் கல்லூரி அணியானது போட்டியின் வெற்றி இலக்கை 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி அடைந்து வெற்றியை பதிவு செய்தது.

வடக்கின் பெரும் சமர்: யாழ். பரியோவான் கல்லூரி அபார வெற்றி | Jaffna Central College St John S College Big Match

பரியோவான் கல்லூரியின் வெற்றி இலக்கை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் அரைச்சதம் விளாசிய உதயனன் அபிஜோய்சாந்த் 10 பௌண்டரிகள் அடங்கலாக 49 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றார்.

அதேநேரம் அன்டர்சன் சச்சின் 30 ஓட்டங்கள் எடுத்திருந்தார். போட்டியின் ஆட்டநாயகன் விருதினையும் பரியோவான் கல்லூரியின் உதயனன் அபிஜோய்சாந்த் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US