யாழில் சிவலிங்கத்தை சுற்றியிருக்கும் வெள்ளை நாகம்
யாழ்ப்பாணம்- வலி.வடக்கு காங்கேசன்துறை பகுதியில் உள்ள சிறு கோவிலில் சிவலிங்கத்தை வெள்ளை நாகம் சுற்றியிருக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகின்றது.
அண்மையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை தெற்கு பகுதியில் உள்ள தகரங்களால் வேயப்பட்ட சிறு கோவிலிலேயே அந்த காணொளி இராணுவத்தினரால் எடுக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரின் கோரிக்கை
குறித்த சிறு அம்மன் கோவிலில் பிள்ளையார் , சிவலிங்க உருவச் சிலைகளும் இலட்சுமியின் உருவப்படமும் வைத்து வழிபாடுகள் இடம்பெற்றுவருகின்றது.
இந்நிலையில் பௌர்ணமி தினங்களில் பாம்புகள் அடிக்கடி ஆலயத்திற்கு வந்துள்ளதாகவும் அவ்வாறு ஒரு முறை வந்தபோதே காணொளி எடுக்கப்பட்டதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், கோவில் அமைந்துள்ள காணி உரிமையாளர் கோவிலை கவனமாக பராமரிக்குமாறும்
கோரி இராணுவத்தினர் காணொளியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam
